Published : 09 May 2014 12:00 AM
Last Updated : 09 May 2014 12:00 AM

சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ கலவர சம்பவம்: இந்தியருக்கு 30 மாதம் சிறை, 3 பிரம்படி

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இந்திய நாட்டவர் ஒருவருக்கு 30 மாத சிறைத் தண்டனை, 3 பிரம்படி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் பஸ் விபத்து ஒன்றில் இந்தியர் ஒருவர் இறந்ததால் கலவரம் வெடித்து பஸ்ஸுக்கு தீவைக்கப்பட்டது.

இந்த கலவரத்தை தூண்டிய தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராமலிங்கம் சக்திவேல் நீதிமன்றத் தில் ஒப்புக்கொண்டார். போலீஸ் வாகனம் ஒன்றை கவிழ்க்க தன்னை சுற்றி இருந்தவர்களை அவர் அழைத்துச் சென்றார் என சேனல் நியூஸ் ஏசியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ராமலிங்கம் சக்திவேல் கலவரத்தை தூண்டியதுடன் அருகே இருந்த ராணுவ ஆம்புலன்ஸ் ஒன்றையும் தடி ஒன்றால் தாக்கி சேதப்படுத்தினார். பஸ் ஒன்றுக்கு தீ வைக்கவும் முற்பட்டார் என்றும் அது தெரிவித்துள்ளது.

இரவுப்பணி முடித்த வெளிநாட் டுத் தொழிலாளர்களை லிட்டில் இந்தியா பகுதியிலிருந்து அவர் கள் தங்கும் இடங்களுக்கு அழைத்

துச் செல்ல வந்த பஸ்ஸில் சக்திவேல் குமாரவேலு என்ற தொழிலாளி தற்செயலாக அடிபட்டு இறந்ததுதான் கலவரத்துக்கு காரணமாக அமைந்தது.

வழக்கை நீதிபதி ஜெனிபர் மேரி விசாரித்து தீர்ப்பளித்தார். ராமலிங்கம் சக்திவேல் கும்பலில் ஒருவர் அல்ல. அவர்தான் கலவ ரம் ஏற்பட காரணமாக இருந்துள் ளார். போலீஸ் அதிகாரிகளை நோக்கி அவர் கூச்சல் போட்டதுடன், அவர்களை நோக்கி கண்ணாடி பாட்டில்களையும் வீசியுள் ளார். இதன்மூலம் போலீஸ் அதிகாரி களையே அவர் நேரடியாக எதிர்த் தது உறுதியாகிறது,

குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கம் சக்திவேலின் வன்செயல், சட்டம் ஒழுங்கையும், ஆட்சி அதிகாரத்தை யும் அவர் அப்பட்டமாக மீறியதை காட்டுகிறது. எனவே அவரது குற்ற குணத்தை தண்டிப்பதுடன் நில்லாமல் பொது நலனை பாதுகாக்

கும் வகையிலும் தண்டனை வழங்குவது அவசி யமாகும். போலீஸ் காவலில் அடைக்கப்பட்ட டிசம்பர் 8ம் தேதியிலிருந்து சிறைத் தண்ட னையை கணக்கிட வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி பஸ் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து தெற்கு ஆசியா வைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 49 போலீஸ்காரர்கள். காயம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x