Published : 11 May 2014 01:06 PM
Last Updated : 11 May 2014 01:06 PM
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஜி4 அமைப்பைச் சேர்ந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பான அறிக்கையை ஐ.நா.வுக்கான ஜெர்மனி தூதர் ஹெரால்ட் பிரான் வெளியிட்டார்.
ஜி4 அமைப்பில் உறுப்பினர்க ளாக உள்ள பிரேஸில், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடு கள் இணைந்து வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: பாதுகாப்பு கவுன்சி லில் வீடோ அதிகாரமிக்க நிரந்தர உறுப்பினர் கள் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற சீர்திருத் தங்களை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும்.
சீர்திருத்தம் செய்வதில் தேவை யற்ற தாமதத்தை செய்வது ஐ.நா. சபையை தற்போதைய காலத்திற்கு பொருத்தமற்றதாக ஆக்கிவிடும். பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை வீடோ அதிகாரத்தைப் பெற்றுள்ள 5 நாடுகளில் ஏதேனும் ஒன்று நிராகரித்தால் கூட தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த ‘வீடோ’ அதிகாரம் தொடர்பாக ஐ.நா. சபை உறுப்பினர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. அனைத்துப் பிராந்தியத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வளரும் நாடு களை சேர்ந்தவர்களை உறுப்பினர் களாக்க வேண்டும்.
பாகிஸ்தான் எதிர்ப்பு
இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் கூறுகையில், “குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்க ளைக் கொண்ட இந்த ஜி4 அமைப் பைச் சேர்ந்த நாடுகள், உலகின் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதி கள் போல பேசி வருகின்றன. தங்களின் தேச நலனை முன்னிட்டே ஐ.நாவில் சீர்திருத்தத்தை ஜி4 நாடுகள் கோரி வருகின்றன. அவர்களின் விருப்பம் எப்போதும் நிறைவேறாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT