Published : 07 May 2014 10:59 AM
Last Updated : 07 May 2014 10:59 AM
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக வெள்ளை மாளிகை முன்னாள் பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும் இருவரும் மனம் ஒத்தே உறவில் ஈடுபட்டதாகவும் மோனிகா தெரிவித்துள்ளார்.
வேனிட்டி ஃபேர் என்ற பத்திரிகையில் மோனிகா பிரத்யேகமாக எழுதியுள்ள கட்டுரையில்: "எனக்கும் முன்னாள் அதிபர் கிளின்டனுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.எனது கடந்தகாலம் குறித்த சர்ச்சைகளை கிளர்வதை விடுத்து எனது எதிர்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
கடந்த காலத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு ஒரு அர்த்தம் கற்பிக்க விரும்புகிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க தயார். எங்களிடையே நடந்த சம்பவம் மனம் ஒத்தே நடந்தது. ஆனால் அந்த சம்பவம் அம்பலமான பிறகு நான் அடைந்த அவமானங்கள் ஏராளம்.
என் உயர்அதிகாரி சூழ்நிலைகளை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்பதை மறுப்பதற்கு இல்லை. எனது தற்போதைய லட்சியம், ஆன்லைன் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதே ஆகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT