Published : 02 Apr 2014 10:29 AM
Last Updated : 02 Apr 2014 10:29 AM
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் ராஜினாமாவின் பின்னணியில் எந்தவொரு முக்கிய விவகாரமும் இல்லை. அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடிதான் ஓய்வு பெற்றுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித் துள்ளது.
நான்சி பாவெல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பாவெலின் ராஜினாமா மிகுந்த கவனத்தைப் பெற்றது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற சில சம்பவங்களால் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை மறுசீரமைப்பு செய்வதற்கு வசதியாக நான்சி பாவெல் ராஜினாமா செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக வரும் புதிய தூதர், இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை ஏற்படுத்துவார் என்றும் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது:
நான்சியின் ராஜினாமாவுக்கு பின்னால், முக்கியமான காரணம் ஏதும் இல்லை. அவரின் ராஜினாமா குறித்து கிளப்பிவிடப்படும் செய்திகளில் சிறிதும் உண்மையில்லை. வெளியுறவுத் துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள நான்சி, முறைப்படி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால், ராஜினாமா செய்யும் முடிவை இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுவரும் சூழ்நிலை யில் ஏன் அறிவித்தார் எனத் தெரியவில்லை. ஆனால், அவரின் ராஜினாமாவிற்கும் இந்தியாவுடனான அமெரிக்க உறவுக்கும் சிறிதும் சம்பந்த மில்லை.
அவர் ஓய்வு பெறுவது தொடர்பாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார். அதன்படியே இப்போது பதவி விலகி உள்ளார். இந்தியாவுடனான உறவு ஒரு நபரை மட்டுமே சார்ந்து இல்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் முதல் தூதரக பணியாளர்கள் வரை பலரது பங்களிப்பு உள்ளது. புதிதாக அமையவுள்ள இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம். இவ்வாறு மேரி ஹார்ப் கூறினார்.
66 வயதாகும் நான்சி பாவெல், உகாண்டா, கானா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கான தூதராக பணிபுரிந்துள்ளார். இந்தியாவில் அவர் தூதராக பணிபுரிந்தபோதுதான், அமெரிக் காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் நடைபெற்றது. இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT