Published : 16 Feb 2014 11:00 AM
Last Updated : 16 Feb 2014 11:00 AM

பாகிஸ்தான்–இந்தியா இடையே வர்த்தக உறவு மேம்படுவதை தடுக்கும் பாதுகாப்புப் படைகள்: ஷாபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் – இந்தியா இடையே வர்த்தக உறவு மேம்படுவதைத் தடுக்கும் வகையில் இருநாடுகளின் ராணுவத்தினரும் செயல்படுகின்றனர் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என் பிரிவு) மூத்த தலைவரும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் .சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இருதரப்பு வர்த்தக உறவு மேம்படுவதை இரு நாடுகளின் ராணுவத்தினரும் தடுக்கின்றனர். இரு நாடுகளின் பாதுகாப்புப் படையினரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகில் பொருளாதாரப் பாதுகாப்பு இல்லையென்றால், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த முடியாது.

காஷ்மீர், நதி நீர் பகிர்வு, சியாச்சின் மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினரை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பழைய சம்பவங்களையே நினைத்துக் கொண்டிருந்தால், நம்மால் எதையும் செய்ய முடியாது. இரு நாடுகளுக்கும் இடையே 3 போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்களால் இருதரப்பிலும் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும்தான் அதிகரித் துள்ளதே தவிர தீர்வு ஏதும் ஏற்படவில்லை.” என்றார்.

இந்த பேட்டி பத்திரிகையில் வெளியான பிறகு, சில தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. இதையடுத்து, ஷாபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், இந்தியா – பாகிஸ்தான் வர்த்த கத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் ராணுவம் செயல் படுகிறது என்ற அர்த்தத்தில் ஷாபாஸ் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பும் இந்தியாவுடன் இணக் கமான உறவை ஏற்படுத்த விரும்பு கின்றனர். ஆனால், அவர்களின் வேகத்திற்கு ராணுவம் ஒத்துழைக்க மறுக்கிறது எனக் கூறப்படுகிறது.

வர்த்தகத் துறையில் இந்தியா வுக்கு அவசர அவசரமாக சலுகை களை அளிக்கக் கூடாது. குறிப்பாக விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அரசை அந்நாட்டு ராணுவம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், இரு நாடுகளின் வர்த்தக உறவு தொடர்பாக ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவு களை பாகிஸ்தான் அரசு அமல் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சமீபத்தில் பாகிஸ்தானில் நடை பெற்ற வர்த்தகக் கண் காட்சியில் பங்கேற்பதை மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ரத்து செய்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x