Published : 01 Feb 2014 11:09 AM
Last Updated : 01 Feb 2014 11:09 AM
தங்கள் நிறுவனத்தில் இ-மெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரது பாஸ்வேர்ட் திருடப்பட்டி ருப்பதாக யாகூ நிறுவனம் கூறியுள்ளது. எத்தனை பேரது இ-மெயில் கணக்குகள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சர்வதேச அளவில் இ-மெயில் சேவை அளிப்பதில் கூகுளுக்கு அடுத்தபடியாக யாகூ இரண்டாவது இடத்தில் உள்ளது. 273 மில்லியன் பேர் யாகூ இ-மெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் 81 மில்லியன் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.
ஹேக்கர் எனப்படும் இணைய தள விஷமிகள் இந்த பாஸ்வேர்ட் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பலரது கணக்கு களில் உள்ள இ-மெயில் முகவரிகள் மற்றும் பெயர்கள் திருடப்பட்டுள்ளன என்று யாகூ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகூ இ-மெயிலில் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய பிரச்னை இது. முன்னதாக கடந்த டிசம்பரில் பல நாள்களுக்கு இ-மெயில் சேவை பாதிக்கப்பட்டது. இப்போது பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளை பயன்படுத்து பவர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்ற தானாகவே கோரிக்கை வரும்; எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப் படும் என்று யாகூ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT