Published : 13 Feb 2014 01:07 PM
Last Updated : 13 Feb 2014 01:07 PM

ஹெமிங்வேயின் அரிய ஆவணங்கள் காட்சிக்கு வைப்பு

கியூபாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நோபல் பரிசு எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் அரிய ஆவணங்கள் அமெரிக்காவின் போஸ்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான எர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே (1899-1961), 7 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள் உள்பட பல்வேறு இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். அவர் எழுதிய “For Whom the Bell Tolls”, “ The Old Man and the Sea” ஆகிய நாவல்கள் உலகப் புகழ்பெற்றவை.

சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவில் ஹெமிங்வே வாழ்ந்தார். அங்கிருந்துதான் அவர் காலத்தால் அழியாத படைப்புகளை உலகிற்கு அளித்தார். கியூபாவில் அவர் வசித்த பின்கா விஜியா பகுதி வீட்டில் அவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

அந்த ஆவணங்கள் இப்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி நூலகம், அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஹெமிங்வேயின் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும் தந்தி, வாழ்த்துத் தந்திகள், கடிதங்கள் என டிஜிட்டலில் ஸ்கேன் செய்யப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் ஹெமிங் வேயின் வாழ்க்கையை ஆராய்வ தற்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என்று இலக்கிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x