Last Updated : 25 Jun, 2017 11:06 AM

 

Published : 25 Jun 2017 11:06 AM
Last Updated : 25 Jun 2017 11:06 AM

பாகிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையின்போது சோகம்: பெட்ரோல் டேங்கர் வெடித்து 150 பேர் பலி

கீழே சிந்திய பெட்ரோலை பிடிக்கச் சென்றதால் விபரீதம்

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரியில் இருந்து வீணாக கீழே கொட்டிய பெட்ரோலை பிடிக்க பொதுமக்கள் முண்டியடித்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து லாரி வெடித்துச் சிதறியது. நேற்று நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில் 150 பேர் பலியாயினர். 117 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பஞ்சாப் மாகாணத்தின் பகாவல் பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதி காலை அந்த லாரி வந்தபோது, அகமதுபுர் ஷர்கியா என்ற இடத்தில் அதன் டயர்கள் பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் லாரியில் இருந்து கொட்டிய பெட்ரோலை சேகரிப் பதற்காக முண்டியடித்து ஓடினர். அப்போது திடீரென தீப்பிடித்ததில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பெட்ரோல் சேகரிக்கச் சென்ற பொதுமக்களில் 150 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படு காயமடைந்த 117 பேர் ஆபத் தான நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பகாவல்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி ரானா சலீம் அப்சல் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் துயரமான சம்பவம். படுகாயங்களுடன் பகாவல்பூர் விக்டோரியா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள் ளான லாரியில் இருந்து 50 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் சாலையில் சிந்தியதால் இந்த அளவுக்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது’’ என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தை களும் இந்த விபத்தில் உயிரிழந் திருப்பதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோரின் உடல்கள் கருகி விட்டதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. பெட்ரோலை சேகரிக் கச் சென்றவர்களில் யாரேனும் ஒருவர் சிகரெட்டை பற்ற வைத் திருக்கலாம் என்றும் இதன் காரண மாக இந்த கோர விபத்து நிகழ்ந் திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது ஹாரிப் (40) என்பவர் கூறும்போது, ‘‘நெடுஞ் சாலையில் ஆறாக ஓடும் பெட் ரோலை பிடிப்பதற்காக கிராம மக்கள் ஓடுகின்றனர். நாமும் சென்று பெட்ரோலை பிடிக்கலாம் என உறவினர் ஒருவர் என்னை அழைத்தார். உடனடியாக வீட்டில் இருந்த காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு நெடுஞ்சாலைக்கு ஓடினேன். அப்போது கிராம மக்கள் அனைவரும் டேங்கர் லாரியில் இருந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி பயங்கர சத்தத் துடன் வெடித்தது. நானும் எனது உறவினரும் சற்று தொலைவில் இருந்ததால் தீக்காயங்களுடன் உயிர் தப்பினோம். கிராம மக்களின் பேராசை தான் அவர்களை மரணக் குழிக்குள் தள்ளிவிட்டு விட்டது” என்றார்.

காயமடைந்தவர்களுக்கு மருத் துவமனையில் உயர் தர சிகிச்சை அளிக்கும்படி பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரிப் உத்தர விட்டுள்ளார். படுகாயமடைந்தவர் கள் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக ஹெலிகாப்டர் களையும் அனுப்பி வைத்துள்ளார். தவிர மீட்புப் பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் விரைந் துள்ளன.

இதற்கிடையே உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும், அதிபர் மம்நூன் ஹுசைனும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள னர். ரம்ஜான் பண்டிகை கொண்டாட வுள்ள நிலையில் பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த கோர சம்பவம் அந்நாட்டு மக்களை மிகுந்த சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x