Published : 07 Feb 2014 12:34 PM
Last Updated : 07 Feb 2014 12:34 PM
தொடுதல் உணர்வை செயற்கை கைகள் உணரும் வகையிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
செயற்கை கைகளில் பொருத் தப்படும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட் ரோடுகள், துண்டிக்கப்பட்ட கைகளின் முனையில் இருக்கும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டு உணர்ச்சிகளை உணரச் செய்கின்றன.இந்த செயற்கை உணர்ச்சிக் கருவி பொருத் தப்பட்ட கைகளின் மூலம், ஒரு பொருளை எடுக்கும்போது, அது மென்மையாக இருக்கிறதா, கடினமானதாக இருக்கிறதா என்பதை உணர முடியும். விபத்துகளில் கைகால்களை இழந்தவர்களுக்கு வரப் பிர சாதமாக இந்த புதிய கண்டு பிடிப்பு அமைந்துள்ளது.
தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இந்த செயற்கை கை தொடர்பான கண்டுபிடிப்பு, பரவலான பயன்பாட்டுக்கு வர இன்னும் சிறிது காலமாகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஒன்றில் தனது கையை இழந்த டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் அபோ சோரென்சென் என்பவருக்கு இந்த செயற்கை கையை விஞ்ஞானிகள் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT