Published : 01 Feb 2014 11:24 AM
Last Updated : 01 Feb 2014 11:24 AM
உக்ரைனில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் நேற்று சிலர் பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். உஸ்பெகிஸ்தானின் பிரபல புகைப்பட கலைஞர் உமிதா அக்மிதோவா அவரது மகன் டிமூர் கார்போவ், மேலும் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருமே உக்ரைனை பூர்வீகமாகக் கொண்டவர்கள். உக்ரைன் நாட்டு தேசிய கொடி, அரசை எதிர்த்து வரும் புரட்சியாளர்களின் கொடியை எந்தியபடி இவர்கள் ஊர்வலமாக சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது.
இதேபோன்ற போராட் டத்தில் ஈடுபட்ட உக்ரைனை சேர்ந்த மேலும் 3 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தங்களை உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் நிராகரித்ததால் அவருக்கு எதிராக அங்கு கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பலர் உயிரிழந்து விட்டனர். முக்கிய அலுவலகங்களை எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள் ளதால் நிலைமை மோசமடைந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT