Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக எகிப்து அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடனான ஹமாஸ் இயக்கத்தின் தொடர்பை விட்டுவிட முடியாது. தனது சித்தாத்தங்களையும் வரலா ற்றையும் மறுக்கும்படி ஹமாஸ் இயக்கத்தை யாரும் வற்புறுத்த முடியாது.
பாலஸ்தீனிய மக்கள் பாது காப்பாக வாழும் சூழலையுடைய எகிப்து போன்ற ஒரு நாடு, தனது சித்தாந்தங்களை விட்டுக் கொடுப்பதையும், ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என அறிவிப்பதையும் எதிர்பார்க்கவில்லை என்றார். மத்தியத் தரைக்கடலின் கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காஸா கரை (காஸா ஸ்டிரிப்) எனும் தன்னாட் சிப் பிரதேசத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் இயக்கம் ஆட்சி செய்து வரு கிறது. இவ்வியக்கம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
எகிப்தில் காவல்துறை அலுவலகம் மீது கடந்த சில தினங் களுக்கு வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக, எகிப்தில் உள்ள ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு, எகிப்தின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT