Published : 23 Oct 2013 05:15 PM
Last Updated : 23 Oct 2013 05:15 PM

யுகோஸ்லாவியா: அதிபர் ஜோஸிப் டிட்டோ கல்லறை அருகே மனைவி உடல் அடக்கம்

யுகோஸ்லாவியா முன்னாள் அதிபர் ஜோஸிப் புரோஸ் டிட்டோவின் மனைவி ஜோவன்கா புரோஸின் உடல், பெல்கிரேடில் உள்ள டிடோவின் நினைவிடத்தில் புதைக்கப்படும் என செர்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோவன்கா புரோஸ்(88) இதய நோயால் இறந்தார். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர் என்பதால், அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் வரும் 26 ஆம் தேதி அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸிப் புரோஸ் டிட்டோ கடந்த 1980 ஆம் ஆண்டு இறந்தார். அதற்குப் பிறகு ஜோவன்கா புரோஸ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என, டிட்டோவின் அரசியல் நண்பர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜோஸிப் புரோஸ் டிட்டோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதுதான், ஜோவன்காவின் கடைசி பொது நிகழ்ச்சியாகும். அதற்குப் பிறகு அவர் வெளியில் தென்படவேயில்லை. அவர் வசித்து வந்த செர்பிய அரண்மனையிலிருந்து வலுக்கட்டா யமாக வெளியேற்றப்பட்டு, தனிமையில் வசித்து வந்தார். ஜோவன்காவின் இறுதிக் காலம் வறுமையில் கழிந்தது. ஜோஸிப்-ஜோவன்கா தம்பதிக்கு வாரிசுகள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x