Published : 29 Nov 2013 09:52 AM
Last Updated : 29 Nov 2013 09:52 AM
பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் விநியோக்கிக்கப்பட்ட மருந்தில் ஏற்பட்ட கலப்படத்தால் தனது நாட்டு மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பனாமா நாட்டு அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லி பொது மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
கடந்த 2006- ஆம் ஆண்டு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் மருந்து தயாரிப்பதற்காக சீனாவில் இருந்து 9,000 லிட்டர் கிளசரின் இறக்குமதி செய்தது பனாமா. அந்த கிளசரினில் நச்சுத் தன்மை வாய்ந்த டைஎத்திலின் கிளைக்கால் (diethylene glycol) கலந்திருப்பதை அரசு தரப்பு கண்டறியத் தவறியது. இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இருமல் மருந்துகள் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இதனை உட்கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் பயன் அளிக்கும் நலத்திட்டங்களை பனாமா அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லி இன்று அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்:"பனாமா நாட்டின் சார்பில் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உயிர் இழப்பை எதனைக் கொண்டும் ஈடு கட்ட முடியாது. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT