Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

மாசே துங் தவறிழைத்தது உண்மையே - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதல்

சீன கம்யூனிஸ்டு புரட்சியின் தந்தை என போற்றப்படும் மா சே துங், தான் அதிகாரத்தில் இருந்தபோது தவறுகள் செய்தது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

மா சே துங்கின் 120 வது பிறந்த தின விழாவையொட்டி ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலர் பதவி வகிக்கும் ஜி ஜின்பிங் பேசியதாவது:

மா சே துங் தவறுகள் செய்தார் என்பது உண்மை என்றாலும் நாட்டையே மாற்றி நவீன சீனத்தை படைத்த புரட்சியாளர் என்ற வர லாற்றுக் கண்ணோட்டத்தில் அவரை மக்கள் மதிப்பிடவேண்டும். வரலாற்றில் சர்ச்சைக்குரிய தலை வராக விளங்கிய மா சே துங்கை சரியாக மதிப்பிட வேண்டும்.

ஏராளமான சீனர்கள் மத்தியில் மா சே துங் இன்றும் மரியாதைக் குரியவராகவே திகழ்கிறார். எனினும் பேரழிவுக்கு காரணமான அவரது அரசியல், பொருளாதார கொள்கைகளை முன்வைத்தும் அவரை விமர்சிப்பவர்களும் ஏராளம் உள்ளனர்.

மா சே துங் மகத்தான தலைவர். நாட்டின் தலைவிதியையே மாற்றி நவீன சீனத்தை நிர்மாணித்தவர்

அந்த வரலாற்றுப் புகழ்மிக்க தலைவரை சரியான வரலாற்றுப் பார்வையுடன் மதிப்பிடுவது அவசி யம். புரட்சியாளர்கள் கடவுள்கள் அல்ல. அவர்களும் மனிதர்களே. அவர்களை நாம் கடவுளாக சித்தரித்து நம்மால் வழிபட முடியாது. பெரிய தலைவர்கள் என்பதற்காக அவர்களின் தவறு களை சுட்டிக்காட்டாதீர்கள் என்றோ அல்லது அந்த தவறுகள் சரி செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கூடாது என்றோ மக்களை நாம் தடுக்க முடியாது.

அதேவேளையில் பெருந்தவறு செய்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களது வரலாற்றுச் சாதனை களை அழித்துவிடவோ அல்லது அவர்களை நிராகரித்துவிடவோ முடியாது என்று ஜின்பிங் பேசியதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

மா சே துங் உடல் வைக்கப் பட்டுள்ள நினைவு மண்டபத்தில் அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் உள்ளிட்ட உயர் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாசேதுங்கின் வீடு அமைந் துள்ள ஷாஷன் பகுதியில் உள்ள கிராமத்துக்கு, அவரது பிறந்த தினத்தையொட்டி மரியாதை செய்வதற்காக ஆயிரக் கணக்கானோர் சென்றனர்.

மா சே துங்கின் கொள்கைகள் நாட்டுக்கு பேரழிவு தந்ததால், அவரது கொள்கைகளை மிக மிக அபூர்வமாகவே குறை கூறிப் பேசுவது சீன அரசியல் தலைவர்களின் வாடிக்கை.

1949ல் தேசியவாதிகளை தோற்கடித்து மக்கள் குடியரசை அறி வித்து அதன் முதல் தலைவராக பொறுப்பேற்றார் மா சே துங். பத விக்கு வந்ததும் அவர் கையாண்ட கொள்கைகள் நாட்டுக்கு பேரழிவு தந்தது.

அவரது கூட்டுப்பண்ணை முறை, பெரும்பாய்ச்சல் என்கிற பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 3 கோடி பேர் உயிரிழந்தனர். தமது அரசியல் எதிரிகளை ஒழிக்க 1966லிருந்து 10 ஆண்டுகாலம் அமல்படுத்திய கலாசாரப் புரட்சியின்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கல்வி சீரிழந்தது. இதனால் சர்ச்சைக்குரிய தலைவராகவே சீன வரலாற்றில் மா சே துங் இடம்பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x