Published : 28 Jan 2014 10:05 AM
Last Updated : 28 Jan 2014 10:05 AM
பஞ்சாபியர்கள் பிரிட்டனின் பொருளாதார முன்னேற்றத்துக்கு சிறந்த பங்காற்றி வருகின்றனர் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
லண்டனில் பஞ்சாபி சர்வதேச கலாச்சார விருது வழங்கும் விழாவை டேவிட் கமரூன் ஞாயிற் றுக்கிழமை தொடங்கி வைத்தார். பாங்ரா இசைக் கலைஞர் சன்னி சிங், சமூக அரசியல் வானொலி ஒலிபரப்பு நிலையத்தைச் சேர்ந்த சதி லுதியான்வி, கவிஞர் சமன் லால் சமன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டன. பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகர் சுரீந்தர் ஷிண்டாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் டேவிட் கேமரூன் கூறியதாவது: “இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சர்வதேச அளவில் பிரபலமானவர்கள். அவர்கள் கலைச் சேவைக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய் துள்ளனர். இளையவர்களும் இசையில் பல புதுமைகளைப் படைத்து சாதனை புரிந்து வருகின்றனர். பிரிட்டனில் வசிக்கும் பஞ்சாபியர்கள் அர்ப் பணிப்பு உணர்வுடன் கடும் உழைப்பை மேற்கொள்கின்றனர். ஊடகம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கின்றனர்” என்றார்.
நிகழ்ச்சியில் பிரிட்டன் அரசு வழக்கறிஞர் டோமினிக் கிரீவ், எதிர்க்கட்சியை சேர்ந்த பெண்கள் நலத் துறை நிழல் அமைச்சர் சீமா மல்கோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT