Published : 17 Nov 2013 11:34 AM
Last Updated : 17 Nov 2013 11:34 AM
சேனல் 4 செய்தியாளரான கெலும் மக்ரேக்கு எதிராக வவுனியாவில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் மக்ரேக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் மக்கள் பங்கேற்றனர்.
இலங்கையை விட்டு மக்ரே உடனடியாக வெளியேற வேண்டும் என அவர்கள் கோரினர். “தவறான செய்திகள் “ வெளியிடுவதன் மூலம் தமிழ் - சிங்கள இன மக்களிடையே உள்ள ஒருமைப்பாட்டை மக்ரே சிதைக்கிறார் என ஆர்ப்பாட்டக் காரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தப் போராட்டத்தை இலங்கை அரசும் ராணுவமும் நடத்துவதாக கூறப்படுகிறது.
சேனல் 4 மூலம் போர்க்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் அவலங்களை அவ்வப்போது வெளியிட்டு அதிர்ச்சிவைத்தியம் தந்து வருகிறார் கெலும் மக்ரே. பிரபாகரன் மகன் பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டது, இசைப்ரியா மரணம் உள்ளிட்ட அதிரவைக்கும் விடியோ காட்சிகளை மக்ரேதான் வெளியிட்டார்.
எனவே, இவரை இலங்கையின் வடக்குப் பகுதிக்கு சென்று வர அனுமதிப்பதில் இலங்கை அரசுக்கு தயக்கம் உள்ளது. இந்நிலையில் அவர் இலங்கையின் வடக்குப் பகுதி்க்கு வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT