Published : 08 Mar 2014 11:59 AM
Last Updated : 08 Mar 2014 11:59 AM
உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின்படிதான் செயல்பட்டு வருகிறோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஆதரவாளராக இருக்கும் உக்ரைன் அதிபர் விக்டர் யானு கோவிச்சுக்கு எதிர்ப்பு அதிகரித் ததையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அந்நாட்டில் புதிய அரசு ஒன்று ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை காப்பாற்று கிறோம் என்ற பெயரில், அந் நாட்டுக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்துள்ளனர். கிரிமியா பகுதி ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, உக்ரைன் விவகாரம் குறித்து பேசினார்.
இந்த உரையாடல் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஒபாமாவு டனான உரையாடலின்போது, உக்ரைனில் புதிய அரசு அமைக் கப்பட்டுள்ளதற்கு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று அவர் கூறியுள் ளார். அமெரிக்க ரஷ்ய உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் புதின் பேசியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ராஜ்ஜிய ரீதியாக உக்ரைன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அரசு முயற்சிக்க வேண்டும் என்று புதினிடம் அதிபர் ஒபாமா கூறியுள்ளார். உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உக்ரைன் விவ காரத்தை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் இணைய ஆதரவு
இதற்கிடையே உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சமீபத்தில் ரஷ்யாவுடன் இணை வதற்கு ஆதரவான தீர்மானத்தை கிரிமியா நாடாளுமன்றம் நிறை வேற்றியது. இது தொடர்பாக வரும் மார்ச் 16-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிமியாவின் துறைமுக நகரான சேவாஸ்டோ போலில் உள்ள நகர கவுன்சிலில் நாடாளுமன்றத்தின் (ரஷ்யாவுடன் இணைப்பு) தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா வரவேற்பு; உக்ரைன் எதிர்ப்பு
கிரிமியா நாடாளுமன்றத்தின் வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை வரவேற்பதாகவும், பொதுவாக்கெடுப்பில் மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு அளித்தால் அதற்கு மதிப்பு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான கிரிமி யாவின் தன்னிச்சையான நட வடிக்கையை எதிர்த்து கீவ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் உக்ரைன் அரசு தலைமை வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறுகையில், “கிரிமியா தொடர்ந்து உக்ரைனுடன் இணைந்திருப்பதா அல்லது ரஷ்யாவுடன் இணை வதா என்று நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமான தாகும்.
இது இந்த பகுதியில் சமநிலை யற்ற தன்மையை ஏற் படுத்தி விடும். ராஜ்ஜிய ரீதியான பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உக்ரைன் நிலவரத்தை ஐக்கிய நாடுகள் சபை கண் காணிக்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
யானுகோவிச்சை தேடும் இன்டர்போல்
உக்ரைனை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் விக்டர் யானு கோவிச்சை கைது செய்து ஒப்படைக்குமாறு சர்வதேச காவல் துறையான இன்டர்போலின் உதவியை உக்ரைனில் தற்போது ஆட்சியில் உள்ள நிர்வாகம் அணுகியுள்ளது.
இது தொடர்பான கடிதம் தங்களுக்கு வந்துள்ளதாக இன்டர் போல் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. அதிகார துஷ்பிர யோகம், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை யானுகோவிச் மீது உக்ரைன் அரசு சுமத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT