Published : 06 Feb 2014 11:14 AM
Last Updated : 06 Feb 2014 11:14 AM

ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அசோசேம் கவலை

ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிகரித்திருப்பதாக அசோசேம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அதே சமயத்தில் முறைசார்ந்த ஊழியர்களின் வளர்ச்சி விகிதமும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது குறைந்திருக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லது கிடையாது என்று அசோசேம் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆட்டோமொபைல், உற்பத்தி, டெலிகாம், ஐ.டி., பி.பி.ஓ. எஃப்.எம்.சி.ஜி. ஹெல்த்கேர் மற்றும் கல்வி என அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது, மெடிக்கல், கிராஜுவிட்டி, சேம நல நிதி, பென்ஷன், ஹெல்த் இன்ஷூரன்ஸ், விடுமுறை உள்ளிட்ட எந்தவிதமான இதர சலுகையும் கிடையாது. இத்தனைக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கும், நிரந்தர தொழிலாளர் கள் செய்யும் வேலைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்று அசோசேம் பொதுச்செயாளார் டி.எஸ்.ராவத் தெரிவித்தார்.

ஒப்பந்த தொழிலாளர்களை விட நிரந்தர தொழிலாளர்கள் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வாங்குவதாகவும் இந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது.

டெலிகாம் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் வரை ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து ஆட்டோமொபைல் துறையில் 56 சதவீதமும், கல்வியில் 54 சதவீதமும், உற்பத்தி துறையில் 52 சதவீதமும், எஃப்.எம்.சி.ஜி.யில் 51 சதவீதமும், ஐ.டி. மற்றும் பிபிஓ. துறையில் 42 சதவீதமும், ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டிராவல் துறையில் 35 சதவீதமும் ஹெல்த்கேர் துறையில் 32 சதவீதம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களில் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். டெல்லி, மும்பை, ஆமதாபாத், கொச்சின், பெங்களூரூ, ஹைதரா பாத், இந்தூர், பாட்னா, பூனே, சண்டீகர் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே ஒப்பந்த தொழிலாளர்களின் எண் ணிக்கை அதிகரிப்பது இந்த சர்வேயில் தெரிய வருகிறது. 2010ம் ஆண்டு 22 சதவீதமாக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண் ணிக்கை 2011-ம் ஆண்டு 28 சதவீதமாகவும், 2012-ம் ஆண்டு 32 சதவீதமாகவும், 2013-ம் ஆண்டு 39 சதவீதமாகவும் அதிகரித்திருக் கிறது. கீழ்நிலை தொழிலாளர்களில் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர் கள், மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள் உள்ளிட்டவர்களும் ஒப்பந்த தொழிலாளர்களாக இருப்பதாக ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x