Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM

ஆஸ்திரேலியா: உலகில் முதன்முதலாக நின்று கொண்டே படிக்கும் வகுப்பறை

நின்றுகொண்டே படிப்பதற்கான வகுப்பறை உலகிலேயே முதலாவதாக ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, சிறுவர்கள் இருக்கையில் மணிக்கணக்கில் அமர்ந்தே இருப்பதால் உடல் குண்டாக ஊதிப்போகும் நிலைமை ஏற்படுகிறது.

இதைத் தடுப்பதற்காக பேக்கர் ஐடிஐ இதயம் மற்றும் நீரிழிவு நோய் ஆய்வு மைய வல்லுநர்கள், மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய டெஸ்க்கை வடிவமைத்துள்ளனர். தமது தேவைக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்தபடியோ பாடம் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு டெஸ்க், மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளியின் 6ம் வகுப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்க் அமைக்கப்பட்டதிலிருந்து நிறைய மாணவர்கள் நின்று கொண்டே பாடம் கேட்கின்றனர். மாணவர்கள் நின்றபடி இருப்பதால் அவர்களது சுகாதாரம், உடல்தகுதி, படிப் பாற்றல், நினைவுத்திறன் மேம்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

எவ்வளவு நேரம் அமர்ந்தபடி இருக் கின்றனர் என்பதை அளவிடும் கருவிகள் மாணவர்களுக்கு பொருத்தப்படும். சோம்பலாக மாணவர்கள் இருப்பதை தவிர்க்க பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன.

பள்ளிக்கூடங்களில் தினமும் 3ல் 2 பங்கு காலம் அமர்ந்தபடியே இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், உடல் ஊதி பருமனாதல் போன்ற பிரச்சினைகள் வருகிறன்றன என்பதை முந்தையை ஆய்வுகள் காட்டியுள்ளன.

இப்போதைய புதிய திட்டத்துக்கு மாண வர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளி முதல்வர் ஷரோன் சேட்லிக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x