Published : 31 Oct 2025 11:39 AM
Last Updated : 31 Oct 2025 11:39 AM

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்! 

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது:

சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங்​ ஜாங் ஆகியோர் வெள்​ளிக்​கிழமை (இன்று) பூமி​யில் இருந்து தியான்​காங் விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர்.

சீனா​வின் நிலவுப் பயண திட்​டம் கடந்த 2004-ம் ஆண்​டில் தொடங்​கியது. கடந்த 2007-ம் ஆண்​டில் நில​வுக்கு ரோபோவை அனுப்​பினோம். கடந்த 2020-ம் ஆண்​டில் நில​வில் இருந்து 1.7 கிலோ பாறை, மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்​தோம். அடுத்த கட்​ட​மாக வரும் 2030-ம் ஆண்​டில் நில​வில் சீன வீரர்​கள் கால் பதிப்​பார்​கள். இவ்​வாறு ஜாங்​ ஜிங்போ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x