Published : 14 Oct 2025 09:53 AM
Last Updated : 14 Oct 2025 09:53 AM
கீவ்: உக்ரைனைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்போர்கினி உருஸ் காரில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடோ இறப்பதற்கு முன்பு நிதிச் சிக்கல் காரணமாக மனச்சோர்வில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க
அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் சீன இறக்குமதிகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார். இதனால் கிரிப்டோ கரன்சி சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இதில், குடோவுக்கு 19 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும், குடோவின் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ட்ரம்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் பிட்காயின் மதிப்பு 8 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT