Published : 11 Oct 2025 11:05 AM
Last Updated : 11 Oct 2025 11:05 AM
தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூகுள் டூடுல்கள் முக்கியத் தலைவர்களை நினைவு கூர, முக்கிய தினங்களை நினைவுகூர, ஏதேனும் நிகழ்வுகளை பாராட்ட வெளியிடப்படும். சில நேரங்களில் கலாச்சாரங்களைக் கொண்டாடவும் வெளியிடப்படும். அந்த வகையில். இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரமான இட்லியைக் கொண்டாடும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். கூகுள் லோகோ முழுவதுமே இட்லி, இட்லி மாவு நிறைந்த பாத்திரம், இட்லிடை வேகவைத்தல், அதற்கு தொட்டுக் கொள்ளப்படும் சட்னி, சாம்பார், இட்லிப் பொடி என அலங்காரமாகக் காட்சியளிக்கிறது. அதுவும் அது வாழை இலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்கவர் இட்லி டூடுலை வெளியிட்ட கூகுள், ”இன்றைய கூகுளின் அதிகாரபூர்வ டூடுலானது தென் இந்திய உணவான இட்லியைக் கொண்டாடுகிறது. இது, அரிசி, உளுந்து சேர்த்து அரைத்து நொதிக்கவைத்த மாவில் தயாரிக்கப்படும் இந்தப் பதார்ததமாகும்.” என்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 11 அன்று தொடர்புபடுத்த வேறு கொண்டாட்டங்கள், நினைவுநாட்கள் இல்லாத நிலையில் கூகுள் உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டாட இந்த இட்லி டூடுலை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இட்லி என்பது தென்னிந்தியாவை, இந்தியா முழுமையையும் தாண்டி உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு உணவுக் கலாச்சாரமாக உள்ளதால் இதனை கூகுள் கொண்டாடியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT