Published : 10 Oct 2025 08:44 AM
Last Updated : 10 Oct 2025 08:44 AM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் 20 அம்ச திட்​டத்தை முன்​வைத்​தார்.

இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 6-ம் தேதி அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்​கியது. இஸ்​ரேல் அரசின் மூத்த அமைச்​சர் ரோன் டெர்​மர் தலை​மையி​லான குழுவும், ஹமாஸ் மூத்த தலை​வர் காலில் அல் ஹையா தலை​மையி​லான குழுவும் பேச்​சு​வார்த்​தை நடத்​தி​யது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் நேற்று சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாலஸ்​தீனத்​தின் காசா​வில் போர் நிறுத்​தத்தை அமல்​படுத்த இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளன. இதுதொடர்​பாக இருதரப்​பும் முதல்​கட்ட அமைதி திட்ட ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்டு உள்​ளன. இதன்​படி இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் அனை​வரும் விரை​வில் விடு​தலை செய்​யப்​படு​வார்​கள். வரும் திங்​கள்​கிழமை பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​படக்​கூடும். காசா​வில் நிர்​ண​யிக்​கப்​பட்ட எல்​லைக்​கோடு பகு​திக்கு இஸ்​ரேல் ராணுவ வீரர்​கள் திரும்​பு​வார்​கள். இருதரப்பு இடையே அமை​தியை நிலை​நாட்ட முதல் அடி எடுத்து வைக்​கப்​பட்​டிருக்​கிறது. அமை​திப் பேச்​சுவார்த்​தை​யின்​போது கத்​தார், எகிப்​து, துருக்கி ஆகிய நாடு​கள் சமரச தூதர்​களாக செயல்​பட்​டன. அந்த நாடு​களுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காசா மட்​டுமன்றி ஒட்​டுமொத்த மத்​திய கிழக்​கிலும் அமைதி திரும்​பும். இவ்​வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் அறி​விப்பை தொடர்ந்து இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு தலை​மை​யில் டெல் அவிவ் நகரில் நேற்று இரவு அமைச்​சரவை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் காசா போர் நிறுத்​தத்​துக்கு ஒரு​மன​தாக ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு அமை​திக்​கான நோபல் பரிசை வழங்கவேண்​டும். அதற்​கான அனைத்து தகு​தி​களும் அவருக்கு இருக்​கிறது” என்று குறிப்​பிட்டு உள்​ளார்.

வரும் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இஸ்​ரேலுக்கு செல்​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எகிப்து நாட்​டுக்​கும்​ அவர்​ பயணம்​ மேற்​கொள்​வார்​ என்​று தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x