Published : 07 Oct 2025 06:51 AM
Last Updated : 07 Oct 2025 06:51 AM
துபாய்: ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் அரச பரம்பரையில் வந்தவர் மெஸ்வாட்டி-3. பரம்பரை வழி அரசரான மெஸ்வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 100 உதவியாளர்கள் புடைசூழ தனி விமானத்தில் அபுதாபியில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அரசராக உள்ள மெஸ்வாட்டியின் தந்தை சோபுசா-2-வுக்கு 125 மனைவிகள் என்ற விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது.
15 மனைவிகளுடன் அரசர் மெஸ்வாட்டி வந்திறங்கிய வீடியோ அண்மையில் வெளியானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் பயணத்தின் மெஸ்வாட்டியின் 30 குழந்தைகளும் வந்திருந்தனர்.
அதேநேரத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசர் மெஸ்வாட்டி குறித்து அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எஸ்வாட்டினி நாட்டில் மக்கள் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர் மட்டும் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் வலம் வருவாரா என்று சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எஸ்வாட்டினி நாட்டின் கடைசி அரசராக மெஸ்வாட்டி-3 உள்ளார். இவர் அரசர் என்ற அந்தஸ்தை கடந்த 1986-ம் ஆண்டு அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT