Published : 14 Sep 2025 07:00 AM
Last Updated : 14 Sep 2025 07:00 AM

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது.

நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர். இதை இளம் தலை​முறை​யினர் மிகக் கடுமை​யாக விமர்​சித்​தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழு​வதும் 26 சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து அரசுக்கு எதி​ராக இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர். இந்த போராட்​டம் கலவர​மாக மாறியது. இதில் 51 பேர் உயி​ரிழந்​தனர். 1,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இந்நிலையில், நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்​தினம் இடைக்​கால பிரதம​ராக பதவி​யேற்​றார். அவர் பதவி​யேற்​றவுடன் நாடு முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. தலைநகர் காத்​மாண்டு உட்பட நேபாளம் முழு​வதும் நேற்று இயல்பு நிலை திரும்​பியது. வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம் புனரமைக்​கப்​படும் என்று இடைக்​கால அரசு அறி​வித்​துள்​ளது.

நேபாள முன்​னாள் பிரதமர் சர்மா ஒலி, சீனா​வின் தீவிர ஆதர​வாளர் ஆவார். இதன்​ காரண​மாக ஆட்சி மாற்​றம் குறித்து சீனா எந்த கருத்​தும் தெரிவிக்​காமல் மவுனம் காத்து வரு​கிறது. அதே​நேரம் புதிய பிரதமர் சுசீலா கார்​கிக்கு இந்​தி​யா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட நாடு​கள் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளன.

அடுத்த 6 மாதங்​களில் நேபாளத்​தில் நாடாளு​மன்ற தேர்​தல் நடத்​தப்​படும் என்று உறுதி அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதை முன்​னிட்டு போராட்​டக் குழுக்​கள் சார்​பில் புதி​தாக கட்​சிகள் தொடங்​கப்​படும் என்று தெரி​கிறது. இந்த புதிய கட்​சிகள் முதல்​முறை​யாக தேர்​தலை சந்​திக்க திட்​ட​மிட்டு உள்​ளன. தற்​போது 119 கட்​சிகள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் 8 கட்​சிகள் தேசிய அங்​கீ​காரத்தை பெற்​றுள்​ளன. நேபாள காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளான சிபிஎன் (யுஎம்​எல்), சிபிஎன் (எம்​சி) ஆகியவை அடுத்​தடுத்து ஆட்சி அமைத்து வந்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x