Published : 12 Sep 2025 07:34 AM
Last Updated : 12 Sep 2025 07:34 AM

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்

சார்லி கிக்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆளும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார்.

கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிக் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சார்லி கிக்​கின் படு​கொலையை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன். கடந்த ஆண்டு தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது என் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்​டது. அதிர்​ஷ்ட வச​மாக உயிர் தப்​பினேன். இடது​சாரி அரசி​யல் வன்முறை​ அதி​கரித்து வரு​கின்​றன.

இந்த வன்​முறை​யால் அப்​பாவி பொது​மக்​கள் உயி​ரிழந்து வரு​கின்​றனர். இதை தடுத்து நிறுத்த வேண்​டும். அமெரிக்க நீதிப​தி​கள், பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் மற்​றும் வலது​சாரி சிந்​தனை கொண்​ட​வர்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. வன்​முறை​களில் ஈடு​படுவோர் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் எச்சரித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x