Published : 10 Sep 2025 07:08 AM
Last Updated : 10 Sep 2025 07:08 AM

நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு - முழு விவரம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. | படம்: பிடிஐ | உள்படம்: சர்மா ஒலி

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த நாடு​களில் ஒன்​றாக நேபாளம் திகழ்​கிறது.

அந்நாட்டின் சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த சூழலில் பேஸ்​புக், யூ டியூப், எக்​ஸ், டெலிகி​ராம் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. சீனா​வின் டிக்​டாக் செயலிக்கு மட்​டும் தடை விதிக்​கப்​பட​வில்​லை. இது, நேபாள இளம் தலை​முறை​யினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது.

கடந்த சில நாட்​களாக 28 வயதுக்கு உட்​பட்ட இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து ஊழலுக்கு எதி​ராக பல்​வேறு போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர். அவர்​கள் நேற்று முன்​தினம் நாடாளு​மன்​றத்தை முற்​றுகை​யிட முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை எறிந்து தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக போராட்​டக்​காரர்​கள் மீது துப்​பாக்​கிச்​சூடு நடத்​தப்​பட்​டது. இதில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 400-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இதைத் தொடர்ந்து நேபாளம் முழு​வதும் வன்​முறை, கலவரம் வெடித்​தது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து தலைநகர் காத்​மாண்​டு​வில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்​டனர். காத்​மாண்​டு​வில் உள்ள அதிபர், பிரதமர், உள்​துறை அமைச்​சரின் மாளி​கைகளுக்கு போராட்​டக்​காரர்​கள் நேற்று தீ வைத்​தனர்.

நாடாளு​மன்​றத்​தின் ஒரு பகு​திக்​கும் தீ வைக்​கப்​பட்​டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலி​காப்​டரில் பாது​காப்​பான இடத்​துக்கு தப்​பிச் சென்​றார். இந்த சூழலில் பிரதமர் சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.

காத்​மாண்​டு​வில் அமைந்​துள்ள முன்​னாள் பிரதமர்​கள் பிரசண்​டா, ஷெர் பகதூர் தேவ்​பா, அமைச்​சர் பிருத்வி உட்பட மூத்த அரசி​யல் தலை​வர்​களின் வீடு​களுக்கு போராட்​டக்​காரர்​கள் நேற்று தீ வைத்​தனர். முன்​னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்​பாவை ஒரு தரப்​பினர் அடித்து உதைத்​தனர். இதில் அவர் படு​காயமடைந்​தார். நேபாள நிதித் துறை அமைச்​சர் விஷ்ணு பவு​டாலை, போராட்​டக்​காரர்​கள் காத்​மாண்​டின் பிர​தான தெரு​வில் ஓடவிட்டு அடித்து உதைத்​தனர்.

நேபாள முன்னாள் பிரதமர் சாலாநாத் கனாலின் வீடு காத்மாண் டுவில் உள்ளது. அந்த வீட்டை போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்து எரித்தனர். இதில் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார்.உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்

இந்​தியர் உயி​ரிழப்பு: பிஹார் மாநிலத்தை ஒட்டி நேபாளத்​தின் பிரத் நகர் அமைந்​துள்​ளது. இந்த எல்​லைப் பகு​தி​யில் போராட்​டக்​காரர்​கள் நேற்று வாக​னங்​களுக்கு தீ வைத்​தனர். அப்​போது இந்​திய லாரி ஓட்​டுநர் காகர்​பிட்டா என்​பவர் தீயில் கருகி உயி​ரிழந்​தார். இதைத் தொடர்ந்து இந்​திய வெளி​யுறவுத் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நேபாளத்​தின் நில​வரத்தை மிக​வும் உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கிறோம்.

போராட்​டத்​தில் உயி​ரிழந்த இளைஞர்​களின் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்து கொள்​கிறோம். அனைத்து பிரச்​சினை​களுக்​கும் பேச்​சு​வார்த்தை மூலம் தீர்வு காண வேண்​டும். இப்​போதைக்கு இந்​தி​யர்​கள் யாரும் நேபாளத்​துக்கு செல்ல வேண்​டாம். நேபாளத்​தில் தங்​கி​யுள்ள இந்​தி​யர்​கள் பாது​காப்​பாக இருக்க வேண்​டு​கிறோம். அவர்​களுக்கு உதவி தேவைப்​பட்​டால் இந்​திய தூதரகத்தை அணுகலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய பிரதமர் பலேந்திர ஷா? - நேபாள தலைநகர் காத்மாண்டுவை சேர்ந்தவர் பலேந்திர ஷா (35). எம்.டெக் பட்டம் பெற்றுள்ள இவர், ஆரம்பத்தில் ராப் பாடகராக இருந்தார். பல்வேறு ராப் இசை ஆல்பங்களை வெளியிட்டார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் இளம் தலைமுறையினரிடம் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காத்மாண்டு நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பலேந்திர ஷா சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் நேபாள காங்கிரஸ், சிபிஎன் (யுஎம்எல்) கட்சிகளின் வேட்பாளர்களை அவர் தோற்கடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் காத்மாண்டு மேயராக அவர் பதவி வகித்து வருகிறார்.

ஆரம்பம் முதலே நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கும், மேயர் பலேந்திர ஷாவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. கடந்த ஆண்டு காத்மாண்டு மாநகராட்சியின் ஊழியர்களுக்கு சுமார் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அப்போது பிரதமருக்கும் மேயருக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இளம் தலைமுறையினர் காத்மாண்டு சாலை, தெருக்களில் திரண்டனர். அவர்களின் போராட்டத்துக்கு மேயர் பலேந்திர ஷா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நேபாளத்தின் புதிய பிரதமராக பலேந்திர ஷா பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x