Last Updated : 08 Sep, 2025 03:23 PM

1  

Published : 08 Sep 2025 03:23 PM
Last Updated : 08 Sep 2025 03:23 PM

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு - ஜெலன்ஸ்கி ஆதரவு

கீவ்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரியை ஆதரிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல்களை நடத்தியது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை உக்ரைனுக்கு எதிராக 810 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ்வில் உள்ள அரசு கட்டிடங்கள்

ரஷ்யாவின் கடும் தாக்குதலை அடுத்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "தனது வெட்கக்கேடான தாக்குதல்களால் ரஷ்யா, உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயல்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகை சோதிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. எனவேதான், ரஷ்யாவுக்கும், அந்நாட்டுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் விதிக்கப்படும் கடுமையான வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஆதரிப்பது அவசியமாகிறது. இழப்புகளை அவர்கள் உணர வேண்டும். அதுதான் உண்மையிலேயே உறுதியானது.

புதின் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்வருபவர்களிடம் இருந்து அவர் ஓடி ஒளிகிறார். போர் நிறுத்தத்துக்கும் தலைவர்கள் மட்டத்திலான சந்திப்புக்கும் மறுக்கும் புடினுக்கு, பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதுதான் சரியான பதிலடி" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலகின் பல நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்துள்ளார். குறிப்பாக, பிரேசில் மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 50%, சுவிட்சர்லாந்துக்கு 39%, கனடாவுக்கு 35% வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால், இந்த நாடுகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x