Published : 27 Aug 2025 12:32 AM
Last Updated : 27 Aug 2025 12:32 AM

இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் கொரிய அதிபருட​னான சந்​திப்​பின் போது, இந்​தியா - பாகிஸ்​தான் இடையே​யான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறிய​தாவது: உலகின் பல போர்​களை நான் நிறுத்​தி​யுள்​ளேன். இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே மிகப்​பெரிய போர் ஏற்​பட்​டிருக்​கும். இது​வரை இந்​தி​யா - பாகிஸ்​தான் போர் உட்பட 7 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன்.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஆயுதப் போராக​வும் வெடிப்​ப​தற்கு நேர்ந்​தது. அப்​போது ‘நீங்​கள் எங்​களு​டன் வர்த்​தகம் மேற்​கொள்ள விரும்​பு​கிறீர்​களா? இல்​லை​யா? இப்​படி நீங்​கள் சண்​டை​யிட்​டுக்​கொண்​டால், உங்​களு​டன் எந்​த​வித​மான வர்த்​தக​மும் மேற்​கொள்ள மாட்​டோம்’ என்​றோம். சண்டையை நிறுத்த வர்த்​தகத்தை பயன்​படுத்​தினேன், நான் நிறுத்​திய 7 போர்​களில் 4 போர்​கள், வர்த்​தகம் மற்​றும் வரி​வி​திப்பு அச்​சங்​களால் நிறுத்​தப்​பட்​ட​வை. அவர்​கள் போரைக் கைவிட்​டு​விட்​டனர். போர்​களை நிறுத்​தி​யதன்​ மூலம் கோடிக்​கணக்​கான டாலரை வரி​வி​திப்​பாக நாங்​கள் பெற்​றோம். இவ்​வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x