Published : 09 Aug 2025 12:28 AM
Last Updated : 09 Aug 2025 12:28 AM

இந்தியாவுடன் பேச்சு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

புதுடெல்லி / வாஷிங்டன்: வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ட்ரம்ப், “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களில் ஸ்மார்ட்​போன்​, கணினி, மருந்​துகள், சில வகை உலோகங்​கள், கனிமங்​களுக்கு 50 சதவீத வரி​வி​திப்​பில் இருந்து விலக்கு அளிக்​கப்​பட்டுள்ளது. இதன்​படி இந்​தி​யாவில் தயாரிக்​கப்​படும் ஆப்​பிள் போன் உள்​ளிட்​ட​வற்​றுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​ப​டாது. எனினும் அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் இந்​தி​யா​வின் ஜவுளி, நகைகள், வைரங்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​படும் என்று தெரி​கிறது.

இதுகுறித்து மத்​திய வெளியுறவு அமைச்சக செயலர் (பொருளா​தார உறவுகள்) தாமு ரவி கூறியபோது, ‘‘அமெரிக்​கா​வின் வரி வி​திப்பு என்​பது தற்​காலிக பிரச்​சினைதான். இதற்கு விரை​வில் தீர்வு காணப்​படும். மத்​திய கிழக்கு நாடு​கள், லத்​தீன் அமெரிக்க நாடு​கள், ஆப்​பிரிக்க நாடு​கள், தெற்கு ஆசிய நாடு​களுடன் வர்த்தக உறவை மேம்​படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடு​களுக்கு இந்​திய பொருட்களின் ஏற்​றுமதி அதி​கரிக்​கப்​படும்’’ என்றார்.

இதற்கிடையே, ‘அமெரிக்​கா​வின் போயிங் நிறு​வனத்​திடம் இருந்து ரூ.31,500 கோடி மதிப்​பில் பி-81 ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்த நிலையில், இதுதொடர்​பான ஒப்​பந்​தம் நிறுத்தி வைக்​கப்​பட்டுள்ளது’ என ராய்ட்​டர்ஸ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.

ராஜ்நாத் சிங் பயணம் ரத்து? - பாது​காப்​பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்​கின் வாஷிங்​டன் பயண​ம் ரத்து செய்​யப்​பட்​டுள்ளதாகவும் ராய்ட்​டர்ஸ் நிறு​வன செய்​தி​யில் கூறப்​பட்டிருந்​தது. இதுகுறித்து பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘இந்த செய்​தி​கள் தவறானவை. அமெரிக்கா​வுடன் பல்​வேறு பாது​காப்பு ஒப்​பந்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. ஆயுத கொள்​முதல் நடவடிக்​கைகள் தொடர்​கின்​றன’ என்று தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x