Published : 08 Aug 2025 06:56 AM
Last Updated : 08 Aug 2025 06:56 AM

இந்தியாவைப் போல சீனாவுக்கும் 2 மடங்கு வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

வாஷிங்​டன்: இந்​தி​யா​வைப் போல சீனா​வுக்​கும் 2 மடங்கு வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இந்தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 25% வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​த​வில்லை எனக் கூறி, மேலும் 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார்.

டொனால்டு ட்ரம்ப் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது, “ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்த​வில்லை எனக் கூறி இந்​தி​யா​வுக்​கான வரியை இரண்டு மடங்​காக உயர்த்​தினீர்​கள். ஆனால் இந்​தி​யாவை விட ரஷ்ய கச்சா எண்​ணெயை அதி​கம் வாங்​கும் சீனா மீதான வரியை உயர்த்​தாது ஏன்” என செய்​தி​யாளர் ஒரு​வர் கேள்வி எழுப்​பி​னார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்டு 8 மணி நேரம்​தான் ஆகிறது. அடுத்து என்ன நடக்​கிறது என்​பதை பொறுத்​திருந்து பாருங்​கள். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு வாங்​கும் மேலும் பல நாடு​களுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​படும்.

ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தில் சீனா முதலிடத்​தி​லும் இந்​தியா இரண்​டாம் இடத்​தி​லும் உள்ளன என்​பது உண்மைதான். இந்​நிலை​யில், இந்​தி​யா​வுக்கு கூடு​தல் வரி விதித்​திருப்​பது சீனா​வுக்கு விடுக்​கப்​பட்ட எச்​சரிக்கை ஆகும். இந்​தி​யா​வைப் போல சீனா​வுக்​கும் கூடு​தல் வரி வி​திக்​கப்​படும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x