Published : 16 Jul 2025 07:34 AM
Last Updated : 16 Jul 2025 07:34 AM
வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடுகள் இடையே போரை நிறுத்த சமரச முயற்சிகளை தொடங்கினார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்கப்படும். புதின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக அவரை நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் அழகாக பேசுவார்.
ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரிக்கும் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மற்றும் பேட்டரிகளை அனுப்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT