Published : 14 Jul 2025 11:17 PM
Last Updated : 14 Jul 2025 11:17 PM
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த இருக்கிறோம். 50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும். அதிபர் புதின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த வாரம் செய்திகயாளர்களிடம் பேசும்போதும் கூட புதின் மீதான அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். “புதின் நிறைய மக்களை கொல்வதால் நான் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறேன்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT