Last Updated : 07 Jul, 2025 02:32 PM

 

Published : 07 Jul 2025 02:32 PM
Last Updated : 07 Jul 2025 02:32 PM

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் கண்டனம் - ட்ரம்ப் பெயர் தவிர்ப்பு!

ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

இது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு தீவிர கவலைகளை அளிப்பதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் குறையவும், விநியோகச் சங்கிலிகள் சீர்குலையவும், நிச்சயமற்ற தன்மை ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2035 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5%-ஐ ராணுவ செலவினங்களுக்கு கூடுதலாகச் செலவிடுவது என்ற நேட்டோ நாடுகளின் முடிவை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடுமையாக விமர்சித்தார். சமாதானத்துக்காக செலவிடுவதைவிட போருக்காக செலவிடுவது எப்போதுமே எளிதானது என்று அவர் விமர்சித்தார்.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த தீர்மானத்தில் இஸ்ரேல் பெயரோ, அமெரிக்காவின் பெயரோ இடம்பெறவில்லை. காசாவில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தீவிர கவலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளையும் அங்கீகரிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் பிரிக்ஸ் யோசனை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான தீர்மானத்தில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் மாநாடு குறித்து... - பிரிக்ஸ் கூட்​டமைப்பு 2009-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தியோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அங்கு சென்​றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்​டு, உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

உச்சி மாநாட்​டின் முதல் நாளான நேற்று ‘சர்​வ​தேச அமை​தி, பாது​காப்​பு, சீர்​திருத்​தம், நிர்​வாகம்’ குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்​வ​தேச சுற்​றுச்​சூழல், சுகா​தா​ரம் குறித்த சிறப்பு கூட்​டம் நடை​பெற்றது. இதி​லும் பிரதமர் மோடி பங்கேற்​றுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவர் காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அதேபோல், இந்த மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​க​வில்​லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்​கேற்​றுள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்​வேறு நாடு​கள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரி​களை விதித்​துள்​ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் விரி​வாக விவா​திக்​கப்​பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x