Published : 03 Jul 2025 07:26 AM
Last Updated : 03 Jul 2025 07:26 AM

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை புறப்​பட்​டுச் சென்​றார். முதலா​வ​தாக நேற்று மாலை அவர் கானா சென்​றடைந்​தார்.

டெல்லி​யில் இருந்து புறப்​படு​வதற்கு முன்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதிவு​களில் கூறி​யுள்​ள​தாவது: முதலில் ஆப்​பிரிக்​கா​வின் மதிப்​புமிக்க நட்பு நாடும், உலகளா​விய தெற்​கின் முக்​கிய பங்​காளி​யு​மான கானா நாட்​டுக்​குச் சென்​றடைவேன். அங்கு அதிபர் ஜான் டிராமணி மகா​மாவுடன் நடை​பெற உள்ள பேச்​சு​வார்த்​தை, பல்​வேறு துறை​களில் இந்​தி​யா-​கானா நாடு​களுக்கு இடையே​யான நட்பை மேம்​படுத்​து​வதற்​கான வாய்ப்பை வழங்​கும்.

ஜூலை 3, 4-ம் தேதி​களில், இந்​தியா வரலாற்று ரீதி​யாகப் பிணைந்​துள்ள நாடான டிரினி​டாட் & டொபாகோ​வில் இருப்​பேன். அதிபர் கிறிஸ்​டின் கார்லா கங்​காலூ மற்​றும் பிரதமர் கம்லா பெர்​சாட்​-பிஸ்​சேஸருட​னான சந்​திப்​பு​ இரு நாடு​களுக்கு இடையி​லான பொருளா​தார மற்​றும் கலாச்​சார ஒத்​துழைப்​புக்கு உத்​வேகம் அளிக்​கும்.

இதைத் தொடர்ந்து அர்​ஜென்​டி​னா​வுக்​குச் செல்ல உள்​ளேன். இந்​தப் பயணத்​தின் போது அதிபர் ஜேவியர் மிலே​யுடன் விரி​வான கலந்​துரை​யாடல்​களை நடத்​தவுள்​ளேன். பிரேசில் பயணத்​தின்​போது, ரியோ டி ஜெனிரோ​வில் நடை​பெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்​கேற்க உள்​ளேன்.

ரியோ நகரில் நடை​பெறும் பிரிக்ஸ் உச்​சி​மா​நாட்​டின் போது உலகத் தலை​வர்​களு​டன் பல்​வேறு சந்​திப்​பு​கள் இருக்​கும். இந்​தி​யா-பிரேசில் ஒத்​துழைப்​பின் புதிய வழிகளைப் பற்றி விவா​திக்க அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்​வாவைச் சந்​திக்க ஆர்வமாக உள்​ளேன். அதன் பிறகு நமீபியா நாட்​டுக்கு பயணம் செய்ய உள்​ளேன். இவ்​வாறு பிரதமர்​ மோடி தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x