Published : 23 Jun 2025 07:18 AM
Last Updated : 23 Jun 2025 07:18 AM
டெஹ்ரான்: அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மலைக்கு அடியில் அணு சக்தி தளங்களை அமைத்து உள்ளன. இந்த அணு சக்தி தளங்களை அழிக்க பூமியை துளைத்து தாக்குதல் நடத்தும் வெடிகுண்டுகளை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்டில் அமெரிக்கா ஆய்வினை தொடங்கியது.
புதிய வெடிகுண்டை தயாரிக்கும் பணி அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது 69 அடி நீளம், 2.6 அடி விட்டம், 14,000 கிலோ எடை கொண்டது ஆகும். இந்த வெடிகுண்டில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தாக்க வேண்டிய இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்.
ஈரானின் போர்டோ அணு சக்தி தளத்தின் மீது தாக்குதல் நடத்த பி2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்களில் தலா இரு ஜிபியு 57 ரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த வெடிகுண்டுகள் போர்டோ தளத்தின் மீது துல்லியமாக வீசப்பட்டன. இவை 200 அடி ஆழத்துக்கு பூமியை துளைத்து சென்று வெடித்துச் சிதறின. இதில் போர்டோ அணுசக்தி தளம் முழுமையாக தகர்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT