Published : 20 Jun 2025 06:43 AM
Last Updated : 20 Jun 2025 06:43 AM
வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க கூடும் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், எனினும், இறுதி உத்தரவை அவர் இன்னும் பிறப்பிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க இருப்பதாகவும், அதன்பிறகு ட்ரம்ப் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரான் விவகாரத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்குமே தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஈரான் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உள்ள தனது போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT