Published : 07 Jun 2025 08:14 AM
Last Updated : 07 Jun 2025 08:14 AM

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சி

‘டி கிராசே’ நீர்மூழ்கி கப்பலின் வரைபடம்.

வாஷிங்டன்: ‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’.

பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன் யூரோ மதிப்பில் ‘பராகுடா’ என்ற திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிரி படையால் கண்டுபிடிக்க முடியாதபடி மிக நவீன தொழில்நுட்பத்துடன் பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள ‘டி கிராசே’ என்ற இந்த நீர்மூழ்கி கப்பலில் 1000 கி.மீ தூரம் சென்று தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், எப் 21 டார்பிடோக்கள் இதில் உள்ளன. எதிர்கால போர் முறைகளுக்கு ஏற்ற வகையில், எதிரி படைகளிடம் சிக்காத வகையில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ‘டி கிரோசே’ வெளிவந்துள்ளது.

4,700 டன் முதல் 5,200 டன் வரை எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் 324 அடி நீளம் உள்ளது. ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் அணு மின் சக்தி, மற்றும் நீர் மின்சக்தி ஆகியவற்றில் செயல்படும். எனவே, இது ஆண்டுக்கு 270 நாட்கள் இது ரோந்து செல்லும் திறன் படைத்தது. இந்த நீர்மூழ்கி கப்பல் காரணமாக பிரான்ஸ் கடற்படை மட்டும் இன்றி நேட்டோ படையும் வலுப்பெறும்.

கடற்படையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவுக்கு, பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள ‘டி கிராசே’ நீர்மூழ்கி கப்பல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நவீன நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் தயாரிக்கும் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் எதிர்பார்க்கவில்லை. ‘டி கிராசே’ நீர்மூழ்கி கப்பல் குறித்து பென்டகன் அதிகாரிகள் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x