Published : 06 Apr 2025 01:10 AM
Last Updated : 06 Apr 2025 01:10 AM
ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய வீடியோவை அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதிப்படைந்த அமெரிக்கா சமீப காலமாக ஏமனில் உள்ள ஹவுதி படைகளை குறிவைத்து தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில், குழுவாக நின்றிருந்த ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி கொல்லும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் ஹவுதி படையினர் என்றும், அவர்கள் கட்டளைக்காக அங்கு கூட்டமாக காத்திருந்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், அய்யோ, இனி இந்த ஹவுதிகளால் நமது கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது" என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்த தாக்குதல் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் ட்ரம்ப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தரப்பினர் ட்ரம் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
These Houthis gathered for instructions on an attack. Oops, there will be no attack by these Houthis!
They will never sink our ships again! pic.twitter.com/lEzfyDgWP5— Donald J. Trump (@realDonaldTrump) April 4, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT