Published : 14 Feb 2025 03:14 PM
Last Updated : 14 Feb 2025 03:14 PM
கிவ்: செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது, அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியி்ல ஈடுபட்டனர். இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணு சக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது.
மேலும், செர்னோபில் ஆலைக்கு உள்ளேயும் வெளியேயும் கதிர்வீச்சின் அளவு இயல்பாகவும் நிலையாகவும் இருக்கிறது என்று, உலக அணு சக்தி பாதுகாப்பை கண்காணித்து வரும் ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றிரவு (வியாழக்கிழமை) அதிக வெடிக்கும் திறன்கொண்ட போரில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களின் மூலம் ரஷ்யா செர்னோபில்லில் உள்ள அழிக்கப்பட்ட நான்காவது அலகு உலையில் இருக்கும் கதிர் வீச்சுகளில் இருந்து உலகை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு அமைப்பு (shelter) மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் ட்ரோன் தாக்குதலால் செர்னோபில் அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலலில் கதிர் வீச்சு அளவு அதிகரிக்கவில்லை, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட மதிப்பீட்டின் படி தடுப்புஅமைப்பு குறிப்பிடத் தகுந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த நூற்றாண்டிலும் அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியே கசிந்து விடாத வகையில் அந்த தடுப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT