Published : 22 Jan 2025 05:07 AM
Last Updated : 22 Jan 2025 05:07 AM
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில் அவருக்குப் பிறகு துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வான்ஸ் அதிக கவனம் ஈர்த்தார்.
அமெரிக்காவில் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். விழாவில் இவரது மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் ஈவன், விவேக், மிராபெல் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் குழந்தைகளின் சில செயல்களால் அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நிகழ்ச்சி தொடங்க தாமதம் ஆனதால் ஒரு மகன் அங்கேயே தூங்கி வழிந்தது, மிராபெல் அங்கும் இங்கும் ஓடி விளையாடியது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் துணை அதிபராக வான்ஸ் பதவியேற்றபோது, அவரது அருகில் குழந்தையுடன் நின்றிருந்த உஷா தனது கணவரையே பூரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தனது கணவரை பெருமையுடன் பார்த்து மகிழும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் உஷா மற்றும் குழந்தைகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் 1970-களில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்ததாக தெரிகிறது.
பதவியேற்ற பிறகு ட்ரம்ப் ஆற்றிய உரையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் புத்திகூர்மை குறித்தும் எம்.பி. யாக அவர் வெற்றிகரமாக பணியாற்றி வருவது குறித்து பாராட்டி பேசினார். அப்போது அவர், துணை அதிபர் வான்ஸை விட அவரது மனைவி உஷா புத்திசாலி என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT