Published : 21 Jan 2025 07:26 PM
Last Updated : 21 Jan 2025 07:26 PM
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் பங்கேற்ற விஐபிகள், விருந்தினர்களின் நடவடிகைகளை நகைச்சுவை மீம்ஸ் ஆக்குவதில் சமூக ஊடக பயனர்கள் தீவிரம் காட்டினர். இதனால், ட்ரம்ப் பதவியேற்பு நாளில் எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் மீம்களால் நிரம்பி வழிந்தது.
சந்தேகமே இல்லாமல் மீம்ஸ் மெட்டிரியலில் முதலிடம் பிடித்தது, அமெரிக்காவின் முதல் பெண்மணியும், ட்ரம்பின் மனைவியுமான மெலனியா ட்ரம்பின் பெரிய தொப்பியே. கிட்டத்தட்ட அது அவரின் பாதி முகத்தை மறைத்திருந்தது. அதன் பின்பு, மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என அறிவிக்கும் தனது முடிவை ட்ரம்ப் அறிவித்த போது, முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வெடித்துச் சிரிக்கும் வீடியோ மற்றும் மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவி லாரன் சான்செஸை பார்ப்பது போன்ற வீடியோக்களும் மீம்களாகி சமூக ஊடகத்தை தெறிக்க விட்டன.
மெலனியா ட்ரம்ப்பின் தொப்பி: தனது கணவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த மெலனியா ட்ரம்ப், கடல் நீல வண்ணத்திலான வடிவமைக்கப்பட்ட ஆடை ஒன்றை அணிந்து வந்தார். அவை குட்டை பாவாடை, சட்டை மற்றும் மிடுக்கான பெண்களுக்கான கோர்ட் ஆகியற்றை உள்ளடக்கியது. மேலும், அதற்கு இணையான வண்ணத்தில் பட்டையுடன் கூடிய பெரிய தொப்பி ஒன்றை அணிந்திருந்தார். இந்த தொப்பியே மீம்களுக்கான கருவானது. அதேபோல் மெலனியாவை ட்ரம்ப் முத்தமிடும் போது தொப்பி தற்செயல் தடையாக மாறியது தனிக்கதை.
ஹிலாரி கிளிண்டனின் வெடிச் சிரிப்பு: டொனால்ட் ட்ரம்ப் தனது அறிவிப்புகளில் ஒன்றாக, மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக மாற்றுவேன் என கூறியபோது கூட்டத்தில் இருந்த அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரியால் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார். அவரது சிரிப்பு சமூக ஊடகத்தையும் சிரிப்பில் ஆழ்த்தியது. கட்டுப்படுத்த முடியாமல் ஹிலாரி சிரித்தபோது, அவரது கணவர் கிளிண்டன், ஹிலாரியைத் திரும்பிப் பார்க்கிறார். இதனை ஒரு பயனர், "ட்ரம்ப் அமெரிக்க வளைகுடா பற்றி பேச்சைத் தொடங்கும்போது, விவேகமுள்ள உலகம் ஹிலாரி கிளிண்டனாக மாறியது" என்று கேலி செய்துள்ளார்.
Hillary laughing at Trump announcing he’s renaming the Gulf Of Mexico to the Gulf of America pic.twitter.com/UWypR7d8vb
— Adam (@AdamJSmithGA) January 20, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT