Published : 17 Jan 2025 10:07 AM
Last Updated : 17 Jan 2025 10:07 AM
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற ஊகங்கள் வலுத்துள்ளது.
முன்னதாக, முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரிம் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பராக் ஒபாமா மட்டுமே பங்கேற்றார். அப்போதே சமூக ஊடகங்கள் பலவற்றிலும் ஒபாமாவுக்கும், மிச்செலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிச்செல் பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானதால் இந்த ஊகங்கள் வலுப்பெற்றுள்ளது.
மிச்செல் ஒபாமா தரப்பிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில், “அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கிறார். ஆனால் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பங்கேற்கவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாக்களில் முன்னாள் அதிபர்கள் அவர்களின் இணையுடன் பங்கேற்பது கலாச்சார பாரம்பரியமாக அந்நாடில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த மரபிலிருந்து விலகி மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராக் ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பராக் ஒபாமா - மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்யப்போவதாக அந்நாட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT