Published : 08 Jan 2025 02:25 AM
Last Updated : 08 Jan 2025 02:25 AM

திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 125 ஆக அதிகரிப்பு

திபெத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஷிகாட்சே நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அங்கு நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள். படம்​: பிடிஐ

புதுடெல்​லி: ​திபெத்​தில்​ ஏற்​பட்​ட பயங்​கர நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​. மேலும்​ 200-க்​கும்​ மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​. இந்​த நிலநடுக்​கம்​ டெல்​லி, பிஹார்​ ​மாநிலங்​களி​லும்​ உணரப்​பட்​டது.

சீனா​வின்​ ஒரு பகு​தி​யாக உள்​ள ​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை 6.35 மணியள​வில்​ சக்​தி வாய்​ந்​த நிலநடுக்​கம்​ ஏற்​பட்​டது. திபெத்​தில்​ உள்​ள மலைப்​பகு​தி​யில்​ சு​மார்​ 10 கிலோமீட்​டர்​ ஆழத்​தில்​ இந்​த நிலநடுக்​கத்​தின்​ மையப்​புள்ளி இருந்​தது.

இதனால்​ ​திபெத்​, நேபாள நாடுகள்​ நிலநடுக்​கத்​தில்​ குலுங்​கின. இந்​த பயங்​கர நிலநடுக்​கம்​ ரிக்​டரில்​ 7.1 ஆக ப​திவானது என அமெரிக்​க பு​வி​யியல்​ ஆய்வு மையம்​ தெரி​வித்​தது. இந்​த நிலநடுக்​கம்​ ​திபெத்​தின்​ ஜிசாங்​க்​ பகு​தியை மைய​மாகக்​ ​கொண்​டு ஏற்​பட்​ட​தால்​ அப்​பகு​தி​யில்​ கடுமை​யான சேதம்​ ஏற்​பட்​டது. இங்​கு வசிக்​கும்​ மக்​கள்​ கடும்​ பீ​தி அடைந்​தனர்​. கட்​டிடங்​கள்​ குலுங்​கிய​தால்​ வீடுகளை ​விட்​டு வெளி​யேறி தெருக்​களில்​ தஞ்​சம்​ புகுந்​தனர்​.

நிலநடுக்​கம்​ ​காரண​மாக ​திபெத்​தின்​ ஷி​காட்​சே நகரம்​ கடுமை​யாக பா​திக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து நிலநடுக்​கத்​தால்​ பா​திக்​கப்​பட்​ட பகு​தி​களுக்கு மீட்​புப்​படை​யினர்​ ​விரைந்​து சென்று மீட்​புப்​பணி​யில்​ ஈடுபட்​டனர்​. இடிந்​த வீடு​களில்​ சிக்​கிய​வர்​களை மீட்​டனர்​. நிலநடுக்​கத்​தில்​ சிக்​கி இதுவரை 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​. 200-க்​கும்​ மேற்​பட்டோர்​ ​காயமடைந்​து உள்​ளனர்​ என தகவல்​ வெளி​யானது. அவர்​களை மீட்​கும்​ பணி தொடர்​ந்​து நடந்​து வருகிறது. பா​திப்​பு அ​திக​மாக இருப்ப​தால் உ​யிரிழப்​பு எண்​ணிக்கை அ​திகரிக்​கக் ​கூடும்​ என அஞ்​சப்​படு​கிறது. நிலநடுக்​கம்​ ​காரண​மாக ​திபெத்​தில்​ 1,000-க்​கும்​ அ​திக​மான வீடு​களில்​ ​விரிசல்​ ஏற்​பட்​டன.

பிஹார்​, டெல்​லி​யில்​ நிலஅ​திர்​வு: பிஹார்​, டெல்​லி, அசாம்​, மேற்​கு வங்​கம்​ உட்​பட இந்​தி​யா​வின்​ பல பகு​தி​களில்​ நில அ​திர்வு உணரப்​பட்​டது. இந்​தியா மட்​டுமல்​லாமல்​ நேபாளம்​, பூடான்​ ஆகிய நாடு​களி​லும்​ நிலநடுக்​கம்​ உணரப்​பட்​டு உள்​ளது. இப்​பகு​தி​யில்​ வீடுகள்​ உள்​ளிட்​ட கட்​டிடங்​களில்​ இருந்​த மின்​விசிறி, ​விளக்​கு​கள்​ நிலநடுக்​க பா​திப்​பால்​ லேசாக அசைந்​தன.

2015-ல்​ நேபாளத்​தில்​.. ​திபெத்​ நிலநடுக்​கம்​ ​காரண​மாக நேபாளத்​தில்​ கடுமை​யான நில அ​திர்​வு ஏற்​பட்​டது. ஆனால்​ பெரிய அள​வில்​ பா​திப்​புகள்​ இல்​லை என்​று ​முதல்​ கட்​டத்​ தகவல்​கள்​ தெரி​விக்​கின்​றன. கடைசி​யாக நேபாளத்​தில்​ கடந்​த 2015-ம்​ ஆண்​டு ஏப்​ரல்​ 25-ம்​ தே​தி கடுமை​யான நிலநடுக்​கம்​ ஏற்​பட்​டது. அது ரிக்​டர்​ அளவு​கோலில்​ 7.8 என ப​திவானது. அந்த நிலநடுக்​கத்​தால்​ 9 ஆயிரம்​ பேர்​ உ​யி​ரிழந்​தனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x