Last Updated : 16 Nov, 2024 09:04 AM

2  

Published : 16 Nov 2024 09:04 AM
Last Updated : 16 Nov 2024 09:04 AM

மஸ்க்கால் போர்க்களமான ‘எக்ஸ்’ தளம்!

பிரபலமாக இருந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தி ’எக்ஸ்’ எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விஷயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க். 2022-ல் ‘எக்ஸ்’ தளத்தின் சிஇஓவாகப் பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தது என தனது இஷ்டப்படி மாற்றங்களைச் செய்து வருகிறார் மஸ்க்.

இதனால் பலரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானலும் அவர் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. இதனால் உலகளவில் அதிருப்தியடைந்த பயனர்கள், கூட்டமாக ‘எக்ஸ்’ தளத்தைவிட்டு வெளியேறினர். அதன் தொடர்ச்சியாக 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி கார்டியன்’ ஆங்கில செய்தி நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ‘எக்ஸ் என்பது ஒரு நச்சு ஊடக தளம்’ என ’தி கார்டியன்’ முன்வைத்திருக்கும் விமர்சனத்தை வரவேற்றும், கண்டித்தும் கருத்துகளை பதிவிடும் நெட்டிசன்களுக்கு மத்தியில் மோதல் வலுத்துள்ளது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x