Published : 30 Oct 2024 03:16 AM
Last Updated : 30 Oct 2024 03:16 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார்: பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகத் துல்லியமான பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படும் பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் ஒவ்வொரு அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகின் மிகத் துல்லியமான பொருளாதார நிபுணரான கிறிஸ்டோப் பராட், வரும் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராவார் என்று கணித்துள்ளார். அமெரிக்க மக்கள் மனநிலை, மார்க்கெட் நிலவரம், உள்ளூர் பொருளாதாரம், மாகாணங்களில் நிலவும் சூழ்நிலைகள் ஆகியவற்றை வைத்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி கணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரபல பொருளாதார நிபுணரான கிறிஸ்டோப் பராட்தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சந்தைகள், கருத்துக் கணிப்புகள், தேர்தல் மாடல்கள் போன்ற பல்வேறு அளவீடுகளைப் பார்க்கும்போது,​​ தற்போதைய நிலவரப்படி, அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. ட்ரம்ப்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில வெற்றி பெறப் போகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் வெல்வார் என்று கிறிஸ்டோபர் பராட் கூறி வரும் நிலையில், கடந்த 10 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் 9 தேர்தல் வெற்றியைக் துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்று ஆசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்த அதிபர் தேர்தலில் பெரிய அளவில் ஆச்சரிய முடிவுகள் இருக்காது. பலரும் கமலா ஹாரிஸ் வெல்வார் என்று நினைக்கின்றனர். அதுதான் நடக்க போகிறது. தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரங்களில் எந்தவொரு எதிர்பாராத நிகழ்வும் முடிவை மாற்ற வாய்ப்பில்லை. தேர்தல் கருத்துக்கணிப்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை விட அதிக புள்ளிகளை பெறுவதால் அவரே வெற்றிபெறுவார். இவ்வாறு ஆலன் லிக்ட்மேன் கணித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x