Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

5 நாட்களுக்குள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்: நேட்டோ தலைவர் எச்சரிக்கை

அடுத்த 3 அல்லது 5 நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்காக எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும் நேட்டோ உயர்நிலை ராணுவ தளபதி பிலிப் பீரிட்லவ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புதன்கிழமை அவர் கூறியதாவது:

எல்லையில் நிலைமை கவலை அளிப்பதாக இருக்கிறது. ரஷ்யப் படை களின் நடமாட்ட அறிகுறிகளை நேட்டோ கண்டறிந்துள்ளது. அவை பாசறைக்குத் திரும்புவதற்கான அடையாளம் தெரியவில்லை. இந்த படைகள் வலிமை வாய்ந்தவை என்பது மட்டும் அல்ல, ஆயத்த நிலையிலும் உள்ளன.

படையெடுப்பது என முடிவு செய்தால் உக்ரைனுக்குள் அது வெற்றிகரமாக ஊடுருவ முடியும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கள மருத்துவமனைகள், மின்னணு போர் நுட்பத் திறன் என எல்லா நவீன வசதிகளுடனும் ரஷ்யப் படைகள் உள்ளன.

நடவடிக்கையில் இறங்க முடிவெடுத்தால் 3 லிருந்து 5 தினங் களுக்குள் தனது இலக்கினை வெற்றி கரமாக ரஷ்யா நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதே எமது கணிப்பு. கிரிமியாவுக்கு அப்பால் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகம் வரை ஊடுருவுவது இதன் இலக்குகளில் ஒன்று. நாங்களும் எங்களது கூட்டணி படைகளின் ஆயத்தம் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

நிலம், ஆகாயம், கடல் பகுதியில் தமது படைகளை குவிக்க வகை செய்யும் நடவடிக்கைகளை ஏப்ரல் 15 க்குள் திட்டமிடும்படி நேட்டோ நாடுகளின் அமைச்சர்கள் தன்னை கேட்டுக் கொண்டுள்ளனர் என்றார் பிரீட் லவ்.

இதனிடையே, உக்ரைனிலிருந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதை ஆட்சேபித்து மாஸ்கோவு டான எல்லா ஒத்துழைப்பையும் ரத்து செய்ததன் மூலம் மீண்டும் பனிப்போர் மனநிலைக்கு நேட்டோ திரும்பி இருப்பதாக ரஷ்யா புதன்கிழமை குற்றம்சாட்டி இருக்கிறது.

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுயாட்சி பிரதேசமான கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்த துடன் கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு நடத்தியதை செல்லாது என அறிவிக்கும் தீர்மானத் தையும் ஐ.நா. சபையில் நிறைவேற்றின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x