Published : 19 Jul 2014 09:17 AM
Last Updated : 19 Jul 2014 09:17 AM

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: ரஷ்யா மீது அமெரிக்கா சந்தேகம் - மலேசியா, உக்ரைன் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு

மலேசிய விமானம் சுட்டு வீழ்த் தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா சந்தேகம் தெரிவித் துள்ளது.

எஸ்ஏ-11 அல்லது எஸ்ஏ-20 ரக ஏவுகணை மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த இரண்டுமே ரஷ்ய தயாரிப்பு ஏவு கணைகளாகும்.

சம்பவம் நடந்த இடத்தில் உக் ரைன் ராணுவம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாது ரஷ்ய ராணுவமும் நிலை கொண் டுள்ளது. இதுவும் அமெரிக்காவின் சந்தேகத்துக்கு முக்கியக் காரண மாக உள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிக்க மலேசியா, உக்ரைன் தலைவர் களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

விமானத்தை வீழ்த்தியது யார் என்பது உறுதியாக தெரியவராத நிலையில் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கள் நாட்டு தேசிய பாது காப்புக் குழுவுடன் டெலிகான் பரன்ஸில் பேசினார்.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை ஒபாமா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மலேசிய விமானம் வீழ்த்தப் பட்டது குறித்த தனது வருத்தத்தையும், உயிரிழந்த மலேசியர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித் துக் கொண்டார்.

இது தொடர்பாக சர்வதேச விசா ரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய ஒபாமா, மலேசியா வுக்கு அனைத்து வகையான உத விகளையும் செய்யுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ விடமும் ஒபாமா பேசினார். அப்போது விமானம் வீழ்த்தப் பட்டது தொடர்பான விசாரணையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார்.

சர்வதேச விசாரணைக்குழு உக்ரைனுக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிடவும், விசா ரணை மேற்கொள்ளவும் உதவி கரமாக இருப்போம் என்று ஒபாமாவிடம் பெட்ரோ உறுதி கூறியுள்ளார்.

புதினுக்கு வைக்கப்பட்ட குறி?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு வைக்கப்பட்ட குறியில் மலேசிய விமானம் தவறுதலாக சிக்கிவிட்டது என்று இண்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசிய விமானம் சென்ற அதே பாதையில்தான் புதின் சென்ற விமானமும் பறந்துள்ளது. ஆனால் சற்று தாமதமாக புதின் சென்ற விமானம் அப்பகுதியை கடந்துள்ளது.

மலேசிய விமானமும், புதின் சென்ற விமானமும் ஒரே மாதிரி யான வெள்ளை நிறம் கொண் டவை. நீலம் மற்றும் சிவப்பு வண் ணத்தில் கோடுகள் உண்டு. எனவே புதின் சென்ற விமானம் என நினைத்து மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதின் வழக்கமாக ஒரே விமானத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். சம்பவம் நடத்த நேரத் தில் அந்த விமானம் விமானத் தளத் தில்தான் இருந்தது என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதின் இரங்கல்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில் இறந்தவர்களில் 154 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக நெதர்லாந்து அதிபர் மார்க் ரூட்டுக்கு புதின் இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “இது மிகவும் சோகமான சம்பவம். முற்றி வரும் உக்ரைன் விவகாரத்தில் விரைவாக அமைதி தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது” என்று புதின் கூறியுள்ளார்.

மலேசிய விமானம் சுடப்பட்டது தொடர்பாக வெளிப்படையான விசா ரணை நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்துக்கு கடும் கண் டனத்தையும் அவர் தெரிவித் துள்ளார்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் விமானத்தின் கருப்புப் பெட்டி

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டெடுத்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 181 உடல்கள் மீட்கப்பட் டுள்ளதாகவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உக்ரைனில் கிழக்குப் பகுதியில் 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் வியாழக்கிழமை இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என்பது தெரியவரவில்லை. உக்ரைன் அரசும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமான பாகங்கள் பல கி.மீ. சுற்றளவுக்கு விழுந்து கிடக்கின்றன. உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டுள்ளதா கவும், ஆய்வுக்காக அவற்றை மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் பதிவுகள், விமானம் பறந்த வேகம், உயரம், விமான கருவிகளின் செயல்பாடு உள்ளிட்டவையும் பதிவாகியிருக்கும். இதன் மூலம் முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x