Published : 15 Jul 2014 09:51 AM
Last Updated : 15 Jul 2014 09:51 AM
ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
2000 முதல் 2010-ம் ஆண்டு வரை ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத் தினர். இதில் உலகளாவிய அளவில் 10 ஆண்டுகளில் ஆன்டி பயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2010-ம் ஆண்டில் ஆன்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து 71 நாடுகளில் ஆய்வு நடத்தப் பட்டது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுகுறித்து ஆய்வுக் குழு விஞ்ஞானிகளில் ஒருவரான ரமணன் லஷ்மிநாராயணன் கூறிய போது, சராசரியாக ஓர் இந்தியர் ஆண்டுக்கு 11 ஆன்டிபயாடிக் மருந்துகளையும் ஒரு சீனர் 7 ஆன்டிபயாடிக் மருந்துகளையும் உட்கொள்கிறார் என்று தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT