Published : 27 Jul 2014 11:46 AM
Last Updated : 27 Jul 2014 11:46 AM
சிரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க தீவிரவாதி அபு ஹுராய்ராவின் உரை அடங்கிய வீடியோவை அல் காய்தாவின் அங்கமான அல் நஸ்ரா அமைப்பு வெளியிட்டுள்ளது.
தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அரபு மொழியில், அவர் 17 நிமிடங்கள் ஆற்றிய உரை அதில் இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற தாக்குதலை நடத்திய முதல் அமெரிக்கர், மொனேர் முகமது அபு சால்ஹா என்ற அபு ஹுராய்ரா அல்-அம்ரிகிதான் என்று கருதப்படுகிறது. அவர் சிரியா வில் உள்ள ராணுவ முகாமின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளார்.
அவரின் உரை அடங்கிய வீடியோ பதிவை தங்களின் அல் மனாரா அல் பாய்தா தொலைக்காட்சியில் அல் நஸ்ரா தற்போது வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக அபு ஹுராய்ரா பேசியுள்ளதாவது: “நான் துப்பாக்கி வாங்குவதற்கு கூட காசில்லாத நிலையில், சிரியாவுக்கு வந்தேன். இங்கு இறைவன் எனக்கு துப்பாக்கி மட்டுமின்றி மேலும் பலவற்றை அளித்தார்.
இந்த உலகில் எனக்கு அமைதி இல்லை. இறப்புக்கு பிந்தைய அமைதியைத் தேடிச் செல்கிறேன். அது இந்த உலகில் கிடைக்காது, சொர்க்கத்தில்தான் கிடைக்கும்” என்று அபு ஹுராய்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 25-ம் தேதி சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள ஜபால் அல்-அர்பீன் பகுதியில் இருந்த ராணுவ முகாமை அபு ஹுராய்ரா உள்ளிட்ட 4 பேர் டிரக்குகளில் வெடி பொருள்களை ஏற்றி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அமெரிக்கா வைச் சேர்ந்த ஒருவரும் ஈடுபட்டதை, அந்நாட்டு வெளியுற வுத்துறை அமைச்சகம் அப்போதே உறுதிப்படுத்தியிருந் தது. அபு ஹுராய்ரா, அமெரிக்கா வின் புளோரிடாவைச் சேர்ந்தவர், 2013-ம் ஆண்டு சிரியாவுக்கு வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடை பெற்று வரும் சிரியாவில் வெளிநாடு களைச் சேர்ந்த 9 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பேர் வரை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT